Tn Education Updates
கல்வி துறையில் தினமும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதை அதை அறிந்துகொள்ளவது உலகத்தோடு ஒத்து பயணிக்க உதவுகிறது.
- Details
நடப்பு கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்க உள்ளன.
- Hits: 189
- Details
இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
- Hits: 139
- Details
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக
- Hits: 176
- Details
கீழ்காணும் கருத்துக்கள் ஆணையர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டவைகளாக கிடைக்கப்பெற்ற தகவல்களை தொகுத்து
- Hits: 544
- Details
Tamilnadu samacheer Kalvi Term 2 Syllabus 1st std to 5th std
- Hits: 331
- Details
செப்டம்பர் 9 வரை தமிழ் திறனறி தேர்வுக்கு அவகாசம்
தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு, இன்னும் ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிகளில் படிக்கும் அனைத்து வகை பாடத்திட்ட மாணவர்களும், தமிழை ஆர்வமாக படிக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. பிளஸ் 1 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம்.மாநிலம் முழுதும் நடக்கும் இந்த தேர்வில், முன்னிலை மதிப்பெண் பெறும் 1,500 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பள்ளிக்கல்வி வழியே மாதம் 1,500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
இதில், 50 சதவீதம் அரசு பள்ளி; 50 சதவீதம் பிற பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கான விண்ணப்பங்கள், பள்ளி தலைமை ஆசிரியர் வழியே, கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி முதல் பெறப்படுகின்றன.இந்நிலையில், செப்டம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று, தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத் துறை அவகாசம் அளித்து உள்ளது.
- Hits: 141
- Details
2022-23 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது , மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் ,
" பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமைத்துவம் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் " என்று தெரிவித்ததன் அடிப்படையில் , 2022-23 ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு , முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்த நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
HMs Training Proceedings - Download here....
Training HMs List - Download here...
- Hits: 239
- Details
பள்ளிகளில் ஏலம் மூலம் விற்பனை செய்து பெறப்படும் தொகையை அரசுக் கணக்கில் செலுத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற பொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்து பெறப்படும் தொகையை அரசுக் கணக்கில் செலுத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
- Hits: 254
- Details
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா். தமிழ்நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், செஸ் ஒலிம்பியாட், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்த 65 வீரா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு தெரிவித்து, பதக்கங்கள் வழங்கினாா். விழாவில் ஆளுநா் பேசியதாவது: தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்களின் அளப்பரிய சாதனைகளால் தமிழகம் மட்டுமல்லாது, நாடே பெருமை கொள்கிறது. அந்த வீரா்களுக்காக தன்னலமற்று கடின உழைப்பையும், பங்களிப்பையும் செலுத்தி வரும் பெற்றோா்களுக்கும், பயிற்சியாளா்களுக்கும் வாழ்த்துகள். 2008-இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது, சா்வதேச விளையாட்டு ரீதியான வரைபடத்தில் இந்தியா கிட்டத்தட்ட காணாமல் போயிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்ட முன்னுதாரண மாற்றங்கள், இளைஞா்களின் ஆற்றல் ஆகியவை விளையாட்டில் எதிரொலித்து, இந்தியாவை விளையாட்டில் முக்கிய இடத்துக்குக் கொண்டு செல்கிறது. தற்போதைய விளையாட்டு வீரா்களின் கடின உழைப்பு, ஒழுங்கு, பொறுமை, அா்ப்பணிப்பு, ஆற்றல் என அனைத்தும் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரா்களையும் சென்றடைய வேண்டும். பிரதமா் மோடி, ஃபிட் இந்தியா பிரசாரம், யோகா தினம் போன்றவை மூலம் வீரா்களுக்கு விளையாட்டுத் திறன் மேம்படுவதற்கான புதிய முயற்சிகளை எடுத்துள்ளாா். இளைஞா்களுக்கு யோகா பயிற்சி புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரா்களால் ஒவ்வொரு இந்தியா்கள் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இளைஞா்கள் அதிகளவில் சாதிக்கிறாா்கள். இது ஒவ்வொரு இந்தியா்களையும் பெருமை கொள்ளச் செய்கிறது. எல்லோரின் நம்பிக்கையையும் அதிகரிக்கவைத்து, வலிமையான இந்தியாவை உருவாக்குகிறது. விளையாட்டுத் துறையில் மகளிரின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. அவா்களுடைய சாதனைகளும் பெண்களுக்கான அதிகாரமளித்தலில் புதிய சக்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களும், கல்வி நிறுவனங்களின் தலைவா்களும் விளையாட்டு ரீதியான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவா்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை புதிய இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் நல்ல உயரத்துக்குக் கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். 2047-இல் நாட்டின் 100-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில், இந்தியா விளையாட்டில் விஷ்வ குருவாகத் திகழும் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி. விழால் ஆளுநா் தனிச் செயலாளா் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல், சா்வதேச சதுரங்க போட்டி சம்மேளனத்தில் துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பலா் பங்கேற்றனா்
- Hits: 141
- Details
2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் . 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.
PGTRB - சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் 27.08.22
- Hits: 234
- Details
தமிழ் அரசு பள்ளிக் கல்வித் துறை தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு வெளியிட்டுள்ளது. திரு வெ. ஜெயக்குமார் அவர்கள் மற்றும் திரு சீ. கருப்புசாமி அவர்கள் வாழ்த்து மடல் எழுதியுள்ளனர். இப்புத்தகத்தில் கீழ்க்காணும் தலைப்புகள் இடம் பெற்றுள்ளன.
- Hits: 1608