Select your language

இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அசைன்மென்ட்களை மட்டுமே வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 16ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் பருவத் தேர்வுகள் 23ம் தேதியுடன்  முடிவடைகிறது. அதாவது, 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவடைகிறது.

இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை, 9 நாட்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது