CSS ஐ எப்படி எழுத வேண்டும்?
CSS எழுதுவதற்கு என அடிப்படை கட்டமைப்பு உள்ளது. அதன்படி எழுதினால் மட்டுமே சரியாக செயல்படும்.
அடிப்படை கட்டமைப்பு:
selector { Property: value; }
இதில் selector என்பதை குறிப்பான் என தமிழில் கூறலாம். எனெனில் HTML fileல் எந்த இடத்தில் வேலைமாற்றம் செய்ய வேண்டும் குறிப்பிடும் இடம் இது ஆதலால் குறிப்பான் (selector) ஆகும்.
அதன் பின்னர் ஒரு அடைப்பு {}
க்குள் பல கட்டளைகளை (Rules)எழுதலாம்.
ஒவ்வொரு கட்டளைகயிலும் இரண்டு பகுதி காணப்படும். அவை
- Property (மாற்றப்பட வேண்டிய பொருள்)
- Value (அளவு அல்லது மாற்றத்தின் தன்மை)
இரண்டிற்கும் நடுவில் முக்கற்புள்ளி ( :
) வைத்து பிரித்து காட்ட வேண்டும். பின்னர் ஒரு கட்டளை முடிவுற்றது என்பதை உணர்த்தும் விதமாக ( ;
) வைத்துக்காட்ட வேண்டும். ஒரு selector {} க்குள் எத்தனை கட்டளைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
உதாரணம்
p{ color: red; }
மேலே கொடுக்கப்பட்ட உதாரணத்தில் p
என்பது selector அதாவது htmlல் உள்ள paragraph ஐ குறிக்கும் tag ஆகும்.
அடுத்தாக {}
உள் எழுதப்பட்டுள்ளதை பார்க்கலாம். அதில் color
என்பது Property. அதாவது paragraph ல் உள்ள எழுத்தின் நிறத்தை குறிக்கும்.
அதற்கடுத்து red
என்பது value ஆகும். இது மாற்றப்பட வேண்டிய பொருள் அதாவது எழுத்து சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
மொத்தத்தில் இந்த code மூலம் paragraphல் உள்ள அனைத்து அழுத்துக்களும் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பது தான் இந்த கட்டளை குறிக்கிறது.
அடுத்து இந்த codeஐ எங்கே எழுத வேண்டும் என அடுத்த பகுதியில் பார்ப்போம்.