நீங்களே உங்கள் செல்போனில் Aadhar and Voter Id Link செய்யலாம், www.nvsp.in, Aadhar Card Link with Voter ID
How to Link voter card with aadhar card | Voter id card to aadhaar link | Link voter with Aadhar tamil :
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும்,ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம்பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி ? :
- ஆன்லைன் மூலம் https://www.nvsp.in நீங்கள் விண்ணப்பிக்கலாம்
- Voter Helpline என்ற App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் .
- இ - சேவை மையத்திலும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்
- அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6 பி அல்லது கருடா மொபைல் ஆப்பில் பூர்த்தி செய்து கொடுத்தும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்..
ஆதார் அட்டை இல்லாதவர்கள் :
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அடையாள அட்டை,
- வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட த்துடன் கூடிய கணக்குப் புத்தகம்,
- தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டின் ஸ்மார்ட் கார்டு,
- ஓட்டுநர் உரிமம்,
- நிரந்தர கணக்கு எண் அட்டை,
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று,
- பாஸ்போர்ட்,
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைனில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பது எப்படி (Step by Step ) :
- முதலில் நீங்கள் தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ இணையதளமான https://voterportal.eci.gov.in/ என்ற இணையதளம் செல்லுங்கள்.
- அடுத்து அதில் Login செய்ய வேண்டும். Login ID, Password இல்லை என்றால் dont have account register new user என்பதை கிளிக் செய்து உங்களின் Mobile Number கொடுத்து Login ID, Passwor Create செய்யுங்கள்.
- அடுத்து Login செய்து உள் நுழையுங்கள்
- அதில் FORMS என்பதை கிளிக் செய்யுங்கள்
- அடுத்து வரும் பக்கத்தில் ஆதார் இணைக்க 6B என்ற படிவத்தை கிளிக் செய்யுங்கள்.
- அதில் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பெயர், ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
- அனைத்து விவரங்களையும் சரியாக இணைத்தபின், அதைச் சரிபார்த்தபின் சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும்.
- உங்களிடம் ஆதார் இல்லை என்றால் மேலே குறிபிட்டுள்ள ஆவணம் ஏதாவ்து ஒன்றின் விவரம் அளித்தும் பதிவு செய்து கொள்ளலாம்..
- திரையில் உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வரும் அவ்வளவுதான்..