Select your language

செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணம்.! 

நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. 

யுஜிசி கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கையை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பல்கலைக்கழக மானியக் குழு மீண்டும் எச்சரித்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைத் தேர்வு செய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் முழு கட்டணத்தையும் திரும்பப்பெற அனுமதிக்குமாறு நிறுவனங்களை ஆணையம் கேட்டுக் கொண்டது. 

2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை திரும்பப்பெறும் விண்ணப்பதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் யுஜிசி கல்வி நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும் பொழுது கட்டணம் திரும்பப் பெறாதது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததை எடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.