பிளஸ்-2 முடித்திருந்தால் போதும்... 7,547 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்! 

டெல்லியில் 7547 கான்ஸ்டபிள் (எக்சிகியூட்டிவ்) காலியிடங்கள் உள்ளன. இதில் 2491 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

டெல்லி காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 7,547 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி: +2 முடித்திருக்க வேண்டும். 

வயது: 1.7.2023 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

விண்ணப்பம்: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

உடல் தேர்வு - சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.100, பெண்கள் மற்றும் எஸ்.சி. / எஸ்.டி பிரிவினருக்கு இலவசம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30 வரை 

இணையதளம்: https://ssc.nic.in