Select your language

குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை-II (Asst Public Prosecutor Grade-II, in Prosecution Departments) पण क्रां தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 22.02.2025 மு.ப. அன்று கொள்குறி வகை தேர்வாக நடத்தப்பட்டது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் இன்று (03.03.2025) வெளியிடப்பட்டுள்ளன. இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது 10.03.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள "Answer key Challenge" என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள், வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது