தமிழகத்தில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! வெளியானது அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த வாரம் காலாண்டு தேர்வு முடிந்தது. இதையடுத்து மாணவர்களுக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.அதன்படி, அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது. இந்நிலையில், 1 முதல் 5-ம் வகுப்புக்கு மாணவர்களுக்கு விடுமுறை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அந்தவகையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 3-ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 8-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.