வேலைவாய்ப்பு மையத்தில் அலுவலக உதவியாளா் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு! 


திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக்காவலா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி: அலுவலக உதவியாளா் - 1
தகுதி: எட்டாம் வகுப்பும் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இனச்சுழற்சி அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா்- பொது-முன்னுரிமையுள்ளோா் தோ்வு செய்யப்படுவா்.


பணி: இரவுக்காவலா் 
தகுதி: ஐந்தாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இரவுக்காவலா் பணிக்கு பொதுப்பிரிவினா் - பொது - முன்னுரிமையற்றவா் தகுதியுடையவா்கள் ஆவா்.


வயதுவரம்பு: 01.07.2022 அன்று குறைந்தபட்ச வயது வரம்பு 18, அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமலும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினா் 34 வயதுக்கு மிகாமலும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளோா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து அதனை துணை இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், மேற்கு வட்டாட்சியரகம் (பின்புறம்) திருச்சி-620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சலிலோ சமா்ப்பிக்கலாம். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 27.01.2023