Categories


சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவியான இளம் கபடி வீராங்கனை கார்த்திகா, பக்ரைனில் நடைபெற்ற Asian Youth Games போட்டியில் 18 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் கபடி அணியின் துணை கேப்டனாக தனது முதல் சர்வதேசப் போட்டியில் பங்கேற்று, இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்ல தனது Super Raid மூலம் அணிக்கு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி துணைத் தலைவியாகப் பொறுப்பேற்ற இந்திய மகளிர் கபடி அணி ஆசிய இளைஞர் விளையாட்டுத் தொடரில் தங்கம் வென்றுள்ளது

 

 கண்ணகி நகர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி கார்த்திகா துணைத் தலைவியாகப் பொறுப்பேற்ற இந்திய மகளிர் கபடி அணி ஆசிய இளைஞர் விளையாட்டுத் தொடரில் தங்கம் வென்றுள்ளது!

நாட்டிற்கு பெருமை சேர்த்த நமது அரசுப் பள்ளி மாணவி கார்த்திகாவிற்கும், அவரது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருக்கும், இந்திய அணியினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Asian Youth Games2025ல் வென்ற தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு : துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பதிவு

 

Asian Youth Games2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு

 

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

 

கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.

 

கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா ரமேஷ்-க்கு ஊக்கத்தொகையாக ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கி, வாழ்த்தினார்