Categories
உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க முன் அனுமதி வழங்குவதற்கான புதிய விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க முன் அனுமதி வழங்குவதற்கான புதிய விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

form pdf click here 

உதவிப் பேராசிரியர் சிஎஸ்ஐஆர்-நெட் தேர்வு

உதவிப் பே​ராசிரியர் பணிக்கான 2-ம் கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்.27-ம் தேதி வரை நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது. பல்​கலைக்​கழகம் மற்​றும் கல்​லூரி​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்சி படிப்​புக்​கான மத்​திய அரசின் உதவித்​தொகை பெற​வும் நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த தேர்வு தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) சார்​பில் ஆண்​டுக்கு இரு​முறை கணினிவழி​யில் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதில் சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு சில அறி​வியல் பாடப்​பிரிவு​களுக்கு மட்​டும் பிரத்​யேக​மாக நடத்​தப்​படும்.

அதன்​படி நடப்​பாண்டு 2-ம் கட்ட சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு டிச.18-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான விண்​ணப்​பப்​ ப​திவு நேற்றுடன் முடிந்​தது. இந்​நிலை​யில், பல்​வேறு தரப்​பின் கோரிக்​கைகளை ஏற்று விண்​ணப்​பிக்​கும் அவகாசம் அக்​.27-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து பட்​ட​தா​ரி​கள் /csirnet.nta.ac.in/ என்ற இணை​யதளம் வழி​யாக துரித​மாக விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்​பங்​களில் திருத்​தம் செய்ய அக்​.30, நவ.1-ம் தேதி​களில் வாய்ப்பு வழங்​கப்​படும்.

இந்த தேர்​வானது ஆங்​கிலம், இந்​தி​யில் மட்​டுமே நடை​பெறும். தேர்​வுக்​கான ஹால்​டிக்​கெட் வெளி​யீடு உள்​ளிட்ட கூடு​தல் விவரங்​களை nta.ac.in என்ற வலை​தளத்​தில் அறிந்து கொள்​ளலாம். விண்​ணப்​பிப்​ப​தில் ஏதேனும் சிரமங்​கள் இருப்​பின் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூல​மாக அல்​லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்​னஞ்​சலில் தொடர்​பு​கொண்டு விளக்​கம்​ பெறலாம்​ என்​று என்​டிஏ வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்கப்​பட்​டுள்​ளது.